சாய் சுதர்சன் சிக்ஸர் மழை: குஜராத்திடம் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் 74 ஓட்டங்கள்
சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. 96 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், தொடக்க வீரரான அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
பறக்கவிட்ட சாய் சுதர்சன்
ஜேமி ஓவர்டன் கடைசி கட்டத்தில் 6 பந்துகளில் 18 ஓட்டங்களும், கெய்க்வாட் 60 பந்துகளில் 74 ஓட்டங்களும் விளாச, சென்னை அணி 158 ஓட்டங்கள் எடுத்தது.

காகிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளும், அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் சுதர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் 33 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். சிக்ஸர்களை பறக்கவிட்ட சாய் சுதர்சன் (Sai Sudharsan) 46 பந்துகளில் 87 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
ஜோஸ் பட்லர் (Jos Buttler) ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்கள் எடுக்க, குஜராத் டைட்டன்ஸ் 16.4 ஓவர்களிலேயே 162 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |