தமிழக வீரர் சாய் சுதர்சனை பாராட்டிய ஹர்திக் பாண்டியா
தமிழக வீரர் சாய் சுதர்சனை இந்தியாவுக்காக பல சாதனைகள் செய்வார் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டி பேசியுள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்திய குஜராத் ஜெயண்ட்ஸ்
டெல்லியில் நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த ஆட்டத்தில் முதலில் துப்பாட்டம் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டத்தை மட்டுமே எடுத்திருந்தது.
டெல்லி தரப்பில் வார்னர் 37 ரன், அக்சர் 36 ஓட்டங்கள் எடுத்தனர். இதனையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி களத்தில் இறங்கியது.
இந்த ஆட்டத்தில், தமிழக வீரர் சாய் சுதர்சனின் அரைசதம் வீசி அசத்தினார். தன்னுடைய 62 ஓட்டம் உதவியுடன் 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தன்னுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் ஜெயண்ட்ஸ் அணி.
சாய் சுதர்சனை பாராட்டிய ஹர்திக் பாண்டியா
சாய் சுதர்சனுக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளார்.
இது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில், சாய் சுதர்சன் அருமையாக துப்பாட்டம் செய்தார். கடந்த 15 நாட்களாக வலைப்பயிற்சியின்போது அவர் கடினமாக உழைத்ததற்கான பலன் கிடைத்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி, இந்திய அணிக்காகவும் பல சாதனைகள் செய்வார் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.