TNPL: ஐபிஎல்லில் ருத்ர தாண்டவமாடிய சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே வாணவேடிக்கை
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் அதிரடியாக 86 ஓட்டங்கள் விளாசியுள்ளார்.
ஏழாவது சீசன்
TNPL எனும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 7வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கோவை அணி முதலில் துடுப்பாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ஓட்டங்கள் குவித்துள்ளது.
சாய் சுதர்சன் வாணவேடிக்கை
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 96 ஓட்டங்கள் விளாசி, சாய் சுதர்சன் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் 45 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் குவித்தார்.
Sensational knock from Sai!?#TNPL2023?#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam?#NammaOoruNammaGethu?? pic.twitter.com/i3orr44Qqp
— TNPL (@TNPremierLeague) June 12, 2023
கேப்டன் ஷாருக்கான் அதிரடியாக 15 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார். மிரட்டலாக பந்துவீசிய விஜய் ஷங்கர் 26 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேப்டன் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
End of first Innings update⚡️
— iDream Tiruppur Tamizhans (@TeamTiruppur) June 12, 2023
Lyca Kovai Kings at 179/7 after 1st innings…iDream Tiruppur Tamizhans need 180 runs to win .#tamizhanda#meesayamurukkisollu#tnpl #tnpl#dreamtiruppurtamizhans #lycakovaikings#endof1stinnings pic.twitter.com/CRz9ToTLpP