ஐபிஎல் வரலாற்றில் எந்த இந்தியா வீரரும் செய்யாத சாதனையை படைத்த தமிழக வீரர்
2025 ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டியில், நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது.
முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ்
இதில், முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு, 217 ஓட்டங்கள் குவித்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 82 ஓட்டங்கள் குவித்தார்.
இதை தொடர்ந்து, 218 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன் மூலம், 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளனர்.
ஒரே மைதானத்தில் 5 சதம்
இந்த ஐபிஎல் தொடரில், இதுவரை சாய் சுதர்சன் 3 அரை சதங்களை அடித்துள்ளார். மேலும் கடந்த ஐபிஎல் தொடரில் 2 அரை சதங்கள் அடித்தார். 5 அரை சதங்களையும், அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் அடித்துள்ளார்.
இதன் மூலம், ஒரே மைதானத்தில் தொடர்ச்சியாக 5 அரை சதம் அடித்த ஒரே இந்திய வீரர் மற்றும் 2வது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக 2018-19 காலக்கட்டதில், பெங்களூர் அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தொடர்ந்து 5 அரை சதங்கள் அடித்தார்.
கெயிலை முந்திய சாய் சுதர்சன்
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கு இது 30வது ஐபிஎல் போட்டியாகும்.
இதன் மூலம், 30 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பட்டியலில் கிறிஸ் கெயிலை முந்தி, சாய் சுதர்சன் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன், 1 சதம் 9 அரைசதங்கள் உட்பட 1307 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் 5 இடத்தில் உள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும், சாய் சுதர்சன் பெற்றுள்ளார். ஷான் மார்ஷ் 1338 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |