ஐபிஎல்லில் ருத்ர தாண்டவம் ஆடிய தமிழர்கள்! மின்னல்வேக அரைசதம்..அதிர்ந்த மைதானம்
ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் மிரட்டலான ஆட்டத்தினால் குஜராத் அணி 204 ஓட்டங்கள் குவித்தது.
சாய் சுதர்சன் அரைசதம்
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் குவித்துள்ளது.
அதிரடியில் மிரட்டிய தமிழக வீரர் சாய் சுதர்சன், 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார். 8வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் சுதர்சனுக்கு இது மூன்றாவது அரைசதம் ஆகும். அவர் மொத்தம் 282 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
A hat-trick of MAXIMUMS, ft. @vijayshankar260 ? ?
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
Relive those SIXES ? #TATAIPL | #GTvKKR | @gujarat_titans pic.twitter.com/nnRwMh3LtJ
விஸ்வரூபமெடுத்த விஜய் சங்கர்
மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் சிக்ஸர் மழை பொழிந்தார். கடந்த இரண்டு போட்டிகளில் பெரிதாக ஓட்டங்கள் எடுக்காத விஜய் சங்கர், இன்றைய போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார்.
45 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிக்ஸர் அடித்து அரைசதம் விளாசிய அவர், 24 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.
@Twitter (gujarat_titans)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தரப்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டுகளும், சுயாஸ் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Innings Break!
— IndianPremierLeague (@IPL) April 9, 2023
A solid show with the bat from @gujarat_titans! ?
6⃣3⃣* for @vijayshankar260
5⃣3⃣ for Sai Sudharsan
The @KKRiders chase begins shortly ? ?
Scorecard ▶️ https://t.co/G8bESXjTyh #TATAIPL | #GTvKKR pic.twitter.com/JkY2qR0WqW