சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது
பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்திக்குத்து சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இச்சம்பம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் தானே வெஸ்ட் பகுதியில், சைஃப் அலி கான் குத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் விஜய் தாஸ் எனும் நபரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தானே ஹிரானந்தானி எஸ்டேட்டில் உள்ள தொழிலாளர்கள் முகாமில் இருந்து காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் அடையாளம்
விஜய் தாஸ் என அடையாளம் காணப்பட்ட நபரின் உண்மையான பெயர் மொஹம்மது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்று மும்பை பொலிஸ் தெரிவித்துள்ளது.
30 வயதுடைய மொஹம்மது ஷரிபுல், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாக நுழைந்து, தன் பெயரை மாற்றி கடந்த 5-6 மாதங்களாக மும்பையில் ஹவுஸ் கீப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் விவரம்
சைஃப் அலி கானின் பந்திரா இல்லத்திற்கு திருடுவதற்காக புகுந்த மொஹம்மது ஷரிபுல், அவர் எதிர்ப்பு காட்டிய போது அவரை கத்தியால் ஆறு முறை குத்தி விட்டு தப்பியுள்ளார். இந்த சம்பவத்தில் சைஃப் அலி கானின் வீட்டு ஊழியர் லிமா காயம் அடைந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது விவரம்
சம்பவ இடத்திலிருந்து ஓடிய சந்தேக நபர், தாதார் பகுதியில் உள்ள கடையில் நுழைந்து காணப்பட்டார். சிசிடிவி மூலம் தடயங்களைப் பயன்படுத்தி பொலிஸார் அவரை கைது செய்தனர்.
சைஃப் அலி கான் மருத்துவமனையில் சிகிச்சை
சைஃப் அலி கான் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட்யள்ளார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தற்போது ஆபத்திலிருந்து மீண்டுள்ளார். மருத்துவர்கள் அவரது ஆரோக்கியம் விரைவாக மீண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் சினிமா நட்சத்திரங்களின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mumbai Police, Vijay Das, Saif Ali Khan stabbing case