8 சிக்ஸர், 6 பவுண்டரிகள்..58 பந்தில் 102 விளாசிய பாகிஸ்தான் வீரர்
Saim ayub blast century in cpl 2026: கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பாகிஸ்தானின் சைம் அயூப் சதம் விளாசினார்.
செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில்ஜமைக்கா கிங்ஸ்மென் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சைம் அயூப்
வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில், ஜமைக்கா கிங்ஸ்மென் மற்றும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் பேட்ரியோட்ஸ் அணிகள் மோதின.
6 fours, 8 sixes and a maiden T20 hundred for Saim Ayub in the CPL 🔥pic.twitter.com/rK8cPAnLAz
— Cricbuzz (@cricbuzz) August 28, 2026
முதலில் ஆடிய ஜமைக்கா கிங்ஸ்மென் கார்ட்டி டக்அவுட் ஆக, மாஸ் சதாகத் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீரர்களும் சொதப்ப, சைம் அயூப் (Saim Ayub) சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடினார்.
58 பந்துகளில் எதிர்கொண்ட அயூப் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்கள் விளாசினார்.
ஃப்ளெட்ஸர், ஷானகா அதிரடி
கீமோ பவுல் 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் விளாச, ஜமைக்கா கிங்ஸ்மென் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
நஸீம் ஷா, வணிந்து ஹசரங்கா மற்றும் ஒபேத் மெக்கோய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய செயின்ட் கிட்ஸ் அன்ட் நேவிஸ் பேட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.
ஆந்த்ரே ஃப்ளெட்ஸர் 38 பந்துகளில் 55 ஓட்டங்களும் (3 சிக்ஸர், 4 பவுண்டரிகள்), தசுன் ஷானகா 18 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.
With 31 runs needed off the last over, Dasun Shanaka made things interesting with three sixes in four balls! 🤯
— Cricbuzz (@cricbuzz) August 28, 2026
But it wasn't enough for St Kitts and Nevis Patriots, who went down to Jamaica Kingsmenpic.twitter.com/lHVmHDK58h

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |