19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி
ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் வெற்றி பெற்றது.
கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி, 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸை வீழ்த்தியது.
மேத்யூ ஃபோர்டே
செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் ஆன்டிகுவா பார்புடா ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையிலான The Hundred போட்டி கிராஸ் இஸ்லேட்டில் நடந்தது.
முதலில் ஆடிய ஆன்டிகுவா அன்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. மேத்யூ ஃபோர்டே, பிஷோப் மற்றும் சேஸின் மிரட்டலான பந்துவீச்சில் ஆன்டிகுவா அணி ஓட்டங்கள் எடுக்க தடுமாறியது.
மழையால் 19 ஓவர்களாக குறைக்கப்பட, ஆன்டிகுவா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ஓட்டங்களே எடுத்தது.
அதிகபட்சமாக ரக்கீம் கார்ன்வால் 26 ஓட்டங்களும், அமீர் ஜன்கூ 23 ஓட்டங்களும் எடுத்தனர். மேத்யூ ஃபோர்டே (Matthew Forde) 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு மழையால் 8 ஓவர்களில் 52 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
செயின்ட் லூசியா அணி 7.4 ஓவர்களில் 54 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் மற்றும் 11 ஓட்டங்கள் எடுத்த மேத்யூ ஃபோர்டே ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |