இங்கிலாந்தை சம்பவம் செய்த பாகிஸ்தான் வீரர்: சிக்ஸர்களை பறக்கவிட்ட விக்கெட் கீப்பர்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து 267 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
சாஜித் கான்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று ராவல்பிண்டியில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி ஸக் கிரேவ்லே, பென் டக்கெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
கிரேவ்லே 43 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்து நோமன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓலி போப் (3), ஜோ ரூட் (5) இருவரும் சஜித் கான் பந்துவீச்சில் அவுட் ஆகினர்.
எனினும் நிதானமாக ஆடிய பென் டக்கெட் (Ben Duckett) 84 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வாணவேடிக்கை காட்டிய ஜேமி ஸ்மித்
பின்னர் வந்த ஹாரி புரூக் (5), பென் ஸ்டோக்ஸ் இருவரும் சாஜித் கானின் (Sajid Khan) சுழலில் சிக்கி பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் (Jamie Smith) அதிரடியில் மிரட்டினார்.
குறிப்பாக சிக்ஸர்களை பறக்கவிட்டு அவர் வாணவேடிக்கை காட்டினார். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த கஸ் அட்கின்ஸன் 39 ஓட்டங்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜேமி ஸ்மித் 6 சிக்ஸர்களுடன் 89 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி விக்கெட்டான ஜேக் லீச்சை (16) சுழற்பந்து வீச்சாளர் சாஜித் கான் வெளியேற்ற, இங்கிலாந்து அணி 267 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சாஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும், சாஹித் மஹ்மூத் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |