இலங்கை ஜனாதிபதி தேர்தல்... குறையும் அனுர வாக்கு சதவீதம்: சஜித் ஏறுமுகம்
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே அனுரகுமார திஸநாயகே முன்னிலை பெற்றுவந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஏறுமுகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுரகுமார முன்னிலை
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரையான வாக்கு எண்ணிக்கையில் பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரகுமார திஸநாயகே முன்னிலையில் இருக்கிறார்.
தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த அனுரகுமார திஸநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது.
இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
சஜித் ஏறுமுகம்
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி அனுர 39.26 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடத்திலும் 34.38 சதவிகித வாக்குகள் பெற்று சஜித் இரண்டாமிடத்திலும் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |