சாகா ஹாட்ரிக்! உலகக் கோப்பை வெண்கலத்தை கைப்பற்றியது இங்கிலாந்து
2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாம் இடத்துக்கான போட்டியில், இங்கிலாந்து அணி பிரான்சை 6-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலத்தை கைப்பற்றியது.
இங்கிலாந்தின் வெற்றி
மியாமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், புகாயோ சாகா (Bukayo Saka) ஹாட்ரிக் அடித்து இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
ஆரம்பத்தில் டெக்லன் ரைஸ் (Declan Rice) தொலை தூரத்தில் இருந்து அடித்த கோலால் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.
பின்னர் எஸ்ரி கான்சா (Ezri Konsa) இரண்டாவது கோலை சேர்த்தார். முதல் பாதியில் சாகா இரண்டு கோல்கள் அடித்து இங்கிலாந்தை 4-0 முன்னிலையில் கொண்டு சென்றார்.

பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் (Didier Deschamps) தனது அணியின் முதல் பாதி ஆட்டத்தை 'பேரழிவு' எனக் குறிப்பிட்டார்.
கிலியன் எம்பாப்பே சாதனை
இரண்டாம் பாதியில் பிரான்ஸ் அணிக்கு, கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) இரண்டு கோல்கள் அடித்து உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் (22) அடித்த வீரராக சாதனை படைத்தார்.
பிராட்லி பார்கோலா (Bradley Barcola) மற்றும் உஸ்மான் டெம்பெல்லே (Ousmane Dembélé) தலா ஒரு கோல் அடித்தனர்.

ஹாட்ரிக்
ஆனால், சாகா தனது மூன்றாவது கோலை பெனால்டி மூலம் அடித்து ஹாட்ரிக் நிறைவு செய்தார். இ
றுதியில் ஜூட் பெல்லிங்காம் (Jude Bellingham) தனிப்பட்ட முயற்சியில் ஆட்டத்தின் 10-வது கோலை அடித்து, உலகக் கோப்பையில் 7 கோல்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார்.
இந்த வெற்றியால், இங்கிலாந்து 1966-இல் உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு, மிகச் சிறந்த முடிவை (மூன்றாம் இடம்) பெற்றுள்ளது.
பிரான்ஸ், 2018-இல் சாம்பியன் மற்றும் 2022-இல் ரன்னர்-அப் ஆனது, இம்முறை வெண்கலத்தை இழந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |