அவுட் என துள்ளிக்குதித்த சாக்ஷி..பொறு பொறுவென்று சாந்தப்படுத்திய தோனி - நகைச்சுவை வீடியோ வைரல்
டி20 உலகக்கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டியில், விக்கெட் என நினைத்து தோனியின் மனைவி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தோனியின் மனைவி சாக்ஷி
2026 டி20 உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
अगं थांब...थांब खाली बस… कॅच नाहीये!
— MumbaiiOutlook (@MumbaiiOutlook) March 6, 2026
.
.#MSDhoni #SakshiDhoni #ViralCelebration #FunnyMoment #CricketFun #SocialMediaViral #DhoniReaction #CricketFans #TrendingNow #ViralVideo #MarathiNews #mumbaioutlook pic.twitter.com/B4eeBEaaZ1
இப்போட்டியில் இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தின்போது, சாம் கர்ரன் வேகமாக ஸ்ட்ரெயிட்டில் ஷாட் அடிக்க ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) அதனை தடுத்தார்.
வைரல் வீடியோ
இதனை விஐபி பாக்சில் நின்று பார்வையாளராக பார்த்துக்கொண்டிருந்த தோனியின் மனைவி சாக்ஷி, அது கேட்ச் என நினைத்து எகிறி குதித்து உற்சாகமாக கொண்டாடினார்.
ஆனால், அவரைத் தவிர அருகில் இருந்த அனைவருக்கும் அது அவுட் இல்லை என்று தெரிந்ததால் சிரித்துவிட்டனர்.
உடனே தோனி சிரித்துக் கொண்டே தனது மனைவி சாந்தப்படுத்தி விளக்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |