தோனியுடன் திருமண வாழ்க்கை! மனம் திறந்து பேசிய சாக்ஷி- என்ன இப்படி சொல்லிட்டாங்க
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் தோனியுடனான திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவரது மனைவியான சாக்ஷி தோனி.
சர்வதேச மகளின் தினத்தை முன்னிட்டு கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளிடம் சுவாரசியமான உரையாடல் நடத்தப்பட்டது.
இதில், தங்களுடைய திருமண வாழ்க்கை குறித்து ஏராளமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் சாக்ஷி தோனி.
அவர் கூறுகையில், அலுவலகத்திற்கு செல்பவரை திருமணம் செய்தாலே ஏராளமான விடயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதுவும் பிரபல கிரிக்கெட் வீரர் என்றால் சொல்லவா வேண்டும், நிறைய விடயங்களை மாற்றியாக வேண்டும்.
பொதுவெளியில் சுதந்திரமாக இருக்க முடியாது, ஒருசிலருக்கு கேமரா முன்னால் சகஜமாக இருப்பார்கள், மற்றவர்களால் அது முடியாது, நண்பர்களுடன் வெளியில் செல்வது கூட கடினம், தேவையில்லாத கிசுகிசுக்கள் வரலாம்.
இதற்கெல்லாம் நாங்கள் தயாராக இருக்க வேண்டும், இருந்தாலும் என் கணவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன், மில்லியன் கணக்கான மக்கள் ரசிக்கும் நாயகனாக அவர் வலம்வருகிறார் என தெரிவித்துள்ளார்.