டோனி எனக்கு கொடுத்த திருமண நாள் பரிசு இது தான்! மனைவி ஷாக்சி பதிவிட்ட புகைப்படம்
இந்திய அணியின் முன்னாள் வீரரான டோனி, தன்னுடைய மனைவியான ஷாக்சிக்கு திருமண நாள் பரிசாக கார் ஒன்றை கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தற்போது சென்னை அணிக்காக விளையாடி வருபவரும், இந்திய அணியின் முன்னாள் வீரருமான டோனி, ஒரு மோட்டர் பிரியர் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவரது வீட்டில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் நிற்பதற்கு என்றே ஒரு தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்தளவிற்கு நிறைய வாகனங்களை டோனி தன் வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று டோனிக்கு 11-வது திருமண நாள், இதனால் தன்னுடைய மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஒரு அழகிய பழைய மொடல் கொண்ட கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.
ஆனால், அது எந்த வகை மொடல், என்ன கார் என்பது தெரியவில்லை, இதை ஷாக்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு டோனிக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.