ஹொட்டலில் உணவு வாங்கிய இளம்பெண்கள் கண்ட அதிரவைக்கும் காட்சி: ஒரு மாகாணத்தையே பரபரப்பாக்கிய நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் இளம்பெண்கள் இருவர் உணவகம் ஒன்றில் வாங்கிய உணவில் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், ஜெனீவா மாகாணம் முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது.
ஹொட்டலில் உணவு வாங்கிய இளம்பெண்கள்
ஜெனீவா மாகாணத்தில், இளம்பெண்கள் ஒருவர் ஹொட்டலில் உணவு வாங்கி சாப்பிட ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதன்படி, Montbrilliant என்னும் நிறுவனத்தின் ஹொட்டல் ஒன்றில் உணவு வாங்கியிருக்கிறார்கள்.
சாலடை அவர்கள் சாப்பிட முயலும்போது, அதில் ஏதோ வித்தியாசமாக தென்படவே, அது என்ன என்று கவனித்துப்பார்த்தால், ஒரு செத்த எலி சாலடில் கிடந்திருக்கிறது.
சாப்பாட்டைப் பார்த்துக் குமட்டிக்கொண்டு எழுந்த இளம்பெண்களை கவனித்த உணவக அலுவலர், சாலடில் செத்த எலி கிடந்ததைக் கண்டதும், பதறிப்போய் உடனடியாக அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன், தவறை ஈடு செய்ய, 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் கிப்ட் வௌச்சர் ஒன்றை அவர்களுக்கு வழங்கியுள்ளார்.
மாகாணம் முழுவதும் பரபரப்பு
ஆனாலும், சாலடில் செத்த எலி கிடந்த விடயம், ஜெனீவா மாகாணம் முழுவதையும் பரபரப்பாக்கிவிட்டது. ஜெனீவா மாகாண மருந்ததக் துறைத் தலைவரான Patrick Edder, சாப்பிட தயாராக இருக்கும் உணவு ஒன்றில், செத்த எலி கிடந்ததை ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ முடியாது என்று கூறியுள்ளார்.
மருத்துவர்கள், பிள்ளைகளுக்கு அந்த எலியிடமிருந்து நோய்த்தொற்று ஏதாவது பரவியுள்ளதா என்பதை அறிய அவர்களை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
பிரச்சினை என்னவென்றால், ஹொட்டலில் சந்தித்த அதிர்ச்சி காரணமாக, வீட்டில் அம்மாக்கள் உணவு சமைக்கும்போது கூட, உணவில் ஏதாவது விழுந்துவிடக்கூடாது என அந்த பிள்ளைகள் கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |