முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலைப் பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
உலக பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பானி வீடு
இந்த வீடானது பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் மையத்தில் இந்த ஆடம்பர வீடு காணப்படுகிறது.
இது இந்தியாவின் விலையுயர்ந்த குடியிருப்பு சொத்து ஆகும். இது மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள 27 மாடி குடியிருப்பாகும்.
4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு உயர்தர வசதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் பெரிய தியேட்டர், spa, நீச்சல் குளம், அதிநவீன சுகாதார மையம், swift elevators, பணி அறை, 600 பணியாளர்களுக்கான தங்குமிடம், 160 வாகனங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் நிற்கும் வகையில் வாகன தரிப்பிடம் என்பவை காணப்படுகின்றன.
இந்நிலையில் அம்பானி வீட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளம் குறித்து தவல்கள் வெளியாகியுள்ளன.
ஊழியர்களின் சம்பளம்
முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட வாகன ஓட்டுநரின் சம்பளமானது மாதத்திற்கு ரூ. 2 லட்சம் ஆகும்.
இந்த வீட்டின் உள் வேலை செய்யும் ஒரு சமையல்காரர் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்றும், சில சமையல் வல்லுநர்கள் தங்கள் திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இன்னும் அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆண்டிலியாவின் ஆடம்பரம் வெறும் சம்பளத்திற்கு அப்பாற்பட்டது.
ஊழியர்களுக்கு தங்குமிடம், உணவு, பயணம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
24 மணிநேர பாதுகாப்பு அமைப்புக்கு மிகவும் திறமையான பணியாளர்கள் இருக்கின்றனர்.
எடை அதிகரிப்பால் ஒலிம்பிக்கில் நீக்கப்பட்ட வினேஷ் போகட் - ஒரு நாளில் 2 முதல் 3 கிலோ எடை குறைக்க முடியுமா?
ஆன்டிலியா ஊழியர்கள் போனஸ், பங்கு விருப்பங்கள் மற்றும் பயண வாய்ப்புகள் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றது.
வெளிநாட்டில் உள்ள ஊழியர்களின் குழந்தைகளின் கல்வியை நிறுவனம் ஆதரிக்கிறது என்று அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் ஆன்டிலியாவின் மதிப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.15,000 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |