பிரான்ஸ் அரசு விதித்த தடை உத்தரவை மீறி கஞ்சா விற்பனைக்கு நீதிமன்றம் அனுமதி
பிரான்ஸ் அரசு கஞ்சா விற்பனைக்கு தடை விதித்துள்ள நிலையில், அந்த உத்தரவை தற்காலிகமாக மாற்றி கஞ்சா விற்பனைக்கு நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, கஞ்சா செடிகளின் இலைகள் மற்றும் பூக்கள் விற்பனைக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்தது.
ஆனால், பிரான்சின் உயர் நிர்வாக நீதிமன்றம் அந்த தடையை தற்காலிகமாக நீக்கி அவற்றை விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது.
சில வகை கஞ்சா செடிகளின் இலைகள் மற்றும் பூக்களில் போதையை ஏற்படுத்தும் தன்மை இல்லை என்று கூறி, அதனால் அவற்றை பிரான்சில் மார்க்கெட்டிங் செய்யலாம் என நீதிமன்றம் கூறிவிட்டது.
ஆனாலும், கஞ்சா செடிகள் வளர்ப்பது, விற்பது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, பதிவு செய்யப்பட்ட கஞ்சா வளர்ப்போர் மட்டுமே, கட்டுப்படுத்தப்பட்ட, பிரான்சால் அனுமதிக்கப்படும் வகை கஞ்சா செடிகளை மட்டும் வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அத்துடன், கஞ்சா இலைகள் மற்றும் பூக்களை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், போதை ரசாயனங்கள் அதிகம் கொண்ட வகை கஞ்சா செடிகள் மீதான தடையும் தொடர்கிறது.