பிரான்ஸ் மக்களே வாங்கிடாதீங்க... கொரோனாவுக்கான போலியான தடுப்பு மருந்து விற்பனை: எச்சரிக்கை தகவல்
பிரான்சில் கொரோனாவுக்கான போலியான தடுப்பு மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலுக்கு தடுப்பு மருந்துகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
ஒரு சில தடுப்பு மருந்துகளுக்கு பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அனுமதி வழங்கிவிட்டாலும், ஒரு சில நாடுகளில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து இறுதிகட்ட கட்ட சோதனையில் உள்ளது.
இதற்கிடையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் என்று மக்களை ஏமாற்றும் வகையில், சில சம்பவங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், கொரோனா வைரசுக்கான போலியான மருந்துகள் சந்தைக்கு வந்துள்ளதாக பிரான்ஸ் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி மருந்துகள் இணையத்தில் விற்கப்படுவதாகவும், இது தொடர்பான விசாரணைகளை சர்வதேச புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 200 யூரோக்கள் முதல் 1,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த வகை மருந்துகள் அனைத்தும் போலியானவை. இதனால் எந்த காரணங்கள் கொண்டும், இதை வாங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.