இலங்கைக்கு எதிராக சல்மான் அதிரடி சதம்! முதல் அரைசதமடித்த தலத்..300 ஓட்டங்கள் இலக்கு
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 300 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது.
பாபர் அஸாம் 29 ஓட்டங்கள்
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. 
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணியில் பஹர் ஜமான் 32 ஓட்டங்களிலும், பாபர் அஸாம் 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ரிஸ்வான் 5 ஓட்டங்களில் வெளியேற, சல்மான் ஆகா மற்றும் ஹுஸைன் தலத் அதிரடியில் மிரட்டினர்.
தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்த ஹுசைன் தலத் (Hussain Talat) 63 பந்துகளில் 62 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 6 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழந்தார்.
ஆகா சதம்
சல்மான் ஆகா (Salman Agha) 87 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்களும், மொஹம்மது நவாஸ் (Mohammad Nawaz) 23 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் விளாசினர். 
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் குவித்தது. வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
A fantastic comeback by Pakistan, led by Salman Agha with the bat. 🔥#Cricket #ODI #PAKvSL #Sportskeeda pic.twitter.com/wQtquMhDLH
— Sportskeeda (@Sportskeeda) November 11, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |