மைதானத்தில் ஆக்ரோஷமாக ஏன் இருக்கக்கூடாது? நான் உரிமம் வழங்குகிறேன் - பாகிஸ்தான் கேப்டன்
யாராவது மைதானத்தில் ஆக்ரோஷமாக இருக்க விரும்பினால் ஏன் கூடாது? என்று பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
தவறான சைகை
ஆசியக் கிண்ணம் 2025 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
முன்னதாக இரு அணிகளும் மோதிய சூப்பர் 4 சுற்று போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ராஃப்பிற்கு தவறான சைகைகளை காட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல், பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா பர்ஹான் துப்பாக்கியால் சுடுவதுபோல் சைகை செய்ததால் ஐசிசி எச்சரிக்கை விடுத்தது.
நான் உரிமம் வழங்குகிறேன்
இந்த நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அஹா (Salman Agha) வீரர்கள் மைதானத்தில் விரும்பும் விதத்தில் செயல்பட தான் அனுமதிப்பதாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "யாராவது மைதானத்தில் ஆக்ரோஷமாக இருக்க விரும்பினால், ஏன் கூடாது. ஒரு வேகப்பந்து வீச்சாளரின் ஆக்ரோஷத்தை நீங்கள் இழந்தால், என்ன மிச்சம்? ஒவ்வொரு வீரருக்கும் தங்கள் உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும்.
வீரர்கள் மைதானத்தில் அவர்கள் விரும்பும் விதத்தில் செயல்பட நான் உரிமம் வழங்குகிறேன்.
அவர்கள் யாரையும் அவமதிக்காமல், எல்லைக்குள் இருக்கும் வரை, எனக்கு அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |