நீங்கள் அதை செய்யாவிடில் அணியில் இருக்க மாட்டீர்கள் என எச்சரித்தார்: பாகிஸ்தான் கேப்டன்
பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அஹா தங்கள் அணியால் யாரை வேண்டுமானாலும் வீழ்த்த முடியும் என்று மீண்டும் ஒருமுறை கூறினார்.
பாகிஸ்தான் வெற்றி
வங்காளதேசத்திற்கு எதிரான நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்கள் என்ற குறைவான ஸ்கோரையே எடுத்தது.
ஆனாலும் பந்துவீச்சு, ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் அணி சந்திக்கிறது.
ஃபீல்டிங் செய்ய முடியாவிட்டால்
போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் சல்மான் அஹா (Salman Agha), "நாங்கள் நன்றாக ஃபீல்டிங் செய்து வருகிறோம். ஷேன் எங்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறார். நாங்கள் கூடுதல் அமர்வுகளை நடத்தி வருகிறோம்.
உங்களால் ஃபீல்டிங் செய்ய முடியாவிட்டால், நீங்கள் அணியில் இருக்க மாட்டீர்கள் என்று மைக் ஹெசன் (Mike Hesson) கூறினார்.
நாங்கள் யாரையும் வெல்லும் அளவிற்கு நல்ல அணி. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை திரும்பி வந்து அதை செய்ய முயற்சிப்போம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |