பணியமர்த்தப்பட்ட 24 மணிநேரத்தில் பதவிநீக்கம்! முன்னாள் வீரரால் பரபரப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட சல்மான் பட், 24 மணிநேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வஹாப் ரியாஸ்
உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்ல முடியாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியதால், கிரிக்கெட் வாரியம் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன் ஒரு படியாக தலைமை தேர்வாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் (Wahab Riaz) நியமிக்கப்பட்டார்.
AFP Photo
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணியை அவர் தெரிவு செய்தார்.
சல்மான் பட் நீக்கம்
இந்த நிலையில் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சல்மான் பட் (39) தேர்வாளர் ரியாஸின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், Spot Fixing புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்ட சல்மான் பட் ஏன் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கேள்விகள் எழுந்தன.
இதன் காரணமாக அவர் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதாவது பணியமர்த்தப்பட்டு 24 மணிநேரத்திலேயே அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தேர்வாளர் வஹாப் ரியாஸ் கூறுகையில், ''சல்மானிடம் அவர் எனது குழுவில் இல்லை என்று கூறினேன். ஏனென்றால் உறுப்பினர்கள் எங்களை எந்த வகையிலும் இணைப்பதை நான் விரும்பவில்லை'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |