பிரபல இந்திய நடிகரின் பிரித்தானிய சுற்றுப்பயணம் ரத்து
பிரபல இந்திய நடிகர் சல்மான்கான் பிரித்தானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார் அவர்.
இந்திய நடிகரின் பிரித்தானிய சுற்றுப்பயணம் ரத்து
The Man of the Nation...
— Lokendra Kumar (@rasafi24365) April 28, 2025
MEGASTAR SALMAN KHAN postponed his upcoming May month concerts in the UK, after the Pahalgam attack..#SalmanKhan pic.twitter.com/zC6v7EEbA9
மே மாதம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில், மான்செஸ்டர் மற்றும் லண்டனில், நடிகைகள் மாதுரி தீக்ஷித், கீர்த்தி சனோன், சாரா அலி கான், திஷா பட்டானி, நடிகர்கள் டைகர் ஷெராஃப், வருன் தவான், சுனில் குரோவர் மற்றும் மனீஷ் பால் ஆகியோருடன் நிகழ்ச்சிகள் நடத்த இருந்தார் சல்மான்கான்.
ஆனால், காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, தங்கள் பிரித்தானிய சுற்றுப்பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக சல்மான்கான் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |