பாம்பு எப்படி கடித்தது? சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சல்மான் கான் கொடுத்த விளக்கம்
நடிகர் சல்மான் கான் தன்னை பாம்பு எப்படி தீண்டியது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது பண்ணை வீட்டில் ஆடம்பரமாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தனது பிறந்தநாளை பண்ணை வீட்டில் பிரம்மாண்டமாக கொண்டாட திட்டமிட்டார்.
இந்நிலையில் நேற்று அவரை பாம்பு ஒன்று தீண்டியதால் அவரது குடும்பத்தினர் உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். சுமார் 6 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பினார்.
இன்று சல்மான் கான் அவரது 56 பிறந்தநாளை தனது குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடி வருகின்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சல்மான் கானிடம் பாம்பு எப்படி கடித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதில் அவர் கூறியதாவது, நேற்று வீட்டிற்குள் பாம்பு புகுந்தது. அப்போது ஒரு குச்சி மூலம் பாம்பை வெளியே எடுத்து செல்லும் போது எனது கையில் மூன்று முறை கடித்தது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். நான் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த போதும் பாம்பு அதே இடத்திலேயே இருந்ததால் அதை பிடித்து சென்று காட்டுக்குள் விட்டதாக தெரிவித்தார்.