சல்மான் கான் அணிந்திருந்த ராம ஜென்மபூமி கைக்கடிகாரம்.., அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் சல்மான்கான் அணிந்துள்ள பல லட்சம் மதிப்புள்ள ராம ஜென்மபூமி ஸ்பெஷல் எடிஷன் வாட்சின் மதிப்பு வெளியாகியுள்ளது.
எவ்வளவு தெரியுமா?
சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள பதிவில் அவர் எபிக் எக்ஸ் ராம் ஜென்மபூமி டைட்டானியம் 2டி கடிகாரத்தை அணிந்துள்ளார்.
இந்த வாட்சை பிரபல ஆடம்பர வாட்ச் தயாரிப்பு நிறுவனமான ஜேக்கப் அன்ட் கோ தயாரித்துள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாட்ச் உலக அளவில் ஒரு சில பிரபலங்களிடம் மட்டுமே உள்ளது.
அந்த வகையில் சல்மான் கானும் வைத்திருக்கும் இந்த வாட்ச்சின் மதிப்பு இந்திய மதிப்பில் குறைந்தது ரூ.34 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடிகாரத்தில் ராம ஜென்மபூமி கோயில் சிற்பத்துடன் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்து கடவுள்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
சல்மான் கான் அணிந்திருக்கும் கடிகாரம் 44 மிமீ அளவு கொண்டதாகும்.
2 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அபிஷேக் பச்சன் இதேபோன்ற ராம ஜென்ம பூமி சிறப்பு வாட்சை அணிந்து இருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |