ஈரான் தலைக்கு விலை வைத்த இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளருக்கு ஜேர்மனியின் அமைதி விருது
இந்தியாவில் பிறந்தவரும், பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் குடியுரிமைகள் பெற்றவருமான பிரபல எழுத்தாளருக்கு ஜேர்மனியின் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
அமைதி விருது
இந்தியாவின் மும்பையில் பிறந்தவரும், பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் குடியுரிமைகள் கொண்டவருமான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் பிராங்பர்ட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித பால் தேவாலயத்தில், ஜேர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
ஜேர்மனியின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான இந்த விருதுடன் 25,000 யூரோக்கள் ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.
Image: Michael Schick/imago images
ருஷ்டியின் சக எழுத்தாளரும், நண்பருமான Daniel Kehlmann, ருஷ்டியைவிட நம் காலகட்டத்தில், கலை மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மிக முக்கியமான பாதுகாவலராக வேறு யாரும் இருக்கமுடியாது என்று பாராட்டியுள்ளார்.
சல்மான் ருஷ்டியின் பாராட்டுகளும் சர்ச்சைகளும்
1981ஆம் ஆண்டு வெளிவந்த தனது தலைசிறந்த படைப்பான மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்னும் நாவலுக்குப் பிறகு உலகளவில் பாராட்டப்பட்ட எழுத்தாளராக புகழ் பெற்ற சல்மான் ருஷ்டி, அதற்காக புக்கர் பரிசையும் பெற்றார்.
San Diego Union-Tribune
ஆனாலும், 1989ஆம் ஆண்டு அவர் எழுதிய சாத்தானின் கவிதைகள் என்னும் புத்தகம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மறைந்த ஈரானிய உச்ச தலைவரான அயதுல்லா கொமேனி, ருஷ்டியை கொல்ல உத்தரவிட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்களை சந்தித்து வரும் ருஷ்டி, 2022 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு பொது நிகழ்ச்சியின்போது கத்தியால் குத்தப்பட்டார், அதனால் அவர் ஒரு கண்ணில் பார்வையை இழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |