பயங்கரவாதிகள் பட்டியலில் நடிகர் சல்மான் கான்.., அதிர்ச்சி தகவல்
கோடிக்கணக்கான இளம்பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான்.
சல்மான் கான் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.
ஹிந்தித் திரையுலகில் மிகவும் பழம்பெரும் மற்றும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவராக சல்மான் கான் மாறியுள்ளார்.

ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூல் படங்களை கொடுத்து வருபவர் சல்மான்கான்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், இந்தி திரைப்படங்கள் சவூதியில் திரையிட்டால் பெரிய அளவில் ஹிட் அடிப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களும் பல கோடிகள் வசூலிப்பதாக சல்மான்கான் ஒரு நிகழ்ச்சியில் கூறினார்.

மேலும் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற உலகின் பல பகுதிகளில் இருந்து வந்தவர்கள் இங்கே இருப்பதே அதற்கு காரணம் என பேசியிருந்தார்.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பலுசிஸ்தானை ஒரு நாடு போல் சல்மான்கான் கூறியது பாகிஸ்தானை கோபமடைய செய்துள்ளது.
சல்மான் கானின் இந்த கருத்து பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாக உள்ளதாக கூறி அவரை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |