முட்டையில் நோய்க்கிருமிகள்: அமெரிக்காவில் 95 பேர் உடல் நலம் பாதிப்பு
முட்டையில் நோய்க்கிருமிகள் பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை அமெரிக்காவில் 95 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெடரல் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
முட்டையில் நோய்க்கிருமிகள்
சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமிகள் பாதித்த முட்டைகளை உட்கொண்டதால், அமெரிக்காவின் 14 மாகாணங்களில் இதுவரை 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
Country Eggs LLC என்னும் நிறுவனம் விற்பனை செய்யும் Nagatoshi Produce, Mishuo மற்றும் Nijiya Markets என்னும் பெயர்களில் விற்பனை செய்யப்படும், CA 7695 என்னும் குறியீட்டு எண்ணும், ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வரை விற்பனை திகதிகளும் கொண்ட முட்டைகளே பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த நிறுவனத்தின், மேற்குறிப்பிட்ட விற்பனை திகதி கொண்ட முட்டைகளை யாராவது வாங்கியிருந்தால், அவைகளை உட்கொள்ளவேண்டாம் என்றும், அவைகளை தூர எறிந்துவிடவோ அல்லது கடைகளில் கொடுத்து அவற்றிற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளவோ செய்யுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த சால்மோனெல்லா கிருமி பாதித்த முட்டைகளை உட்கொண்டால், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கடுமையான வாந்தி, நீரிழப்பு மற்றும் வயிற்றுப்பிடிப்பு ஏற்படலாம்.
அத்துடன், சிறுபிள்ளைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு பிரச்சினைகள் கொண்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |