சிக்ஸர் மழையில் வாணவேடிக்கை! சொந்த மண்ணிலேயே மே.தீவுகளை தவிடுபொடியாக்கிய இங்கிலாந்து
டி20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது.
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது.
முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட் 180 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சார்லஸ் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் எடுத்தார்.
A powerful cameo from the Skipper!?
— Windies Cricket (@windiescricket) June 20, 2024
Live Scorecard⬇️https://t.co/dCfyVVGpTA#WIREADY | #T20WorldCup | #WIvENG pic.twitter.com/IWMqeEV1bw
அணித்தலைவர் ரோவ்மன் பாவெல் 17 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் 36 (32) ஓட்டங்களும், ரூதர்போர்டு 28 (15) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் 25 (22) ஓட்டங்கள் எடுத்து வெளியேற, மொயீன் அலி 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் பிலிப் சால்ட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ருத்ர தாண்டவம் ஆடினர். இவர்களின் விளாசலில் இங்கிலாந்து அணி 18வது ஓவரில், 2 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சால்ட் 47 பந்துகளில் 87 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
பேர்ஸ்டோவ் 26 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 48 ஓட்டங்கள் விளாசினார். ரஸ்டன் சேஸ் மற்றும் ரஸல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |