32 பந்தில் 62 ரன்! மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை நொறுக்கிய இங்கிலாந்து வீரர்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 218 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட சால்ட்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடியது.
வில் ஜேக்ஸ் 12 பந்துகளில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி 25 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த அணித்தலைவர் ஜோஸ் பட்லர் அதிரடியில் மிரட்டினார்.
மறுமுனையில் பிலிப் சால்ட் (Philip Salt) சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 9 ஓவரிலேயே 100 ஓட்டங்களை கடந்தது.
ஜேக்கப் பெத்தெல் ருத்ர தாண்டவம்
சால்ட் 35 பந்தில் 55 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் சேஸ் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் பட்லர் 38 (23) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஜேக்கப் பெத்தெல் ருத்ர தாண்டவமாடினார்.
அரைசதம் விளாசிய அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 62 ஓட்டங்கள் குவித்தார். இதில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
சாம் கர்ரன் அதிரடியாக 13 பந்துகளில் 2 சிக்ஸருடன் 24 ஓட்டங்கள் விளாச, இங்கிலாந்து அணி 218 ஓட்டங்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் மோட்டி 2 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் மற்றும் ரஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |