சிக்ஸர் மழை பொழிந்து 56 பந்தில் 109 ரன்! வெஸ்ட் இண்டீசை வேட்டையாடிய வீரர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பூரன் ருத்ர தாண்டவம்
கிரேனடாவின் தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணியில் பிரண்டன் கிங் 8 ஓட்டங்களிலும், மேயர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் 19 பந்துகளில் 26 ஓட்டங்கள் (2 சிக்ஸர், ஒரு பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.
AP
மறுமுனையில் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர், பவுண்டரிகள் என ருத்ர தாண்டவம் ஆடினார். அவருக்கு உறுதுணையாக பௌல் (39), ரூதர்போர்டு (29), ஹோல்டர் (18) அதிரடி காட்டினர்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ஓட்டங்கள் குவித்தது. பூரன் 45 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் விளாசினார். இங்கிலாந்து தரப்பில் சாம் கர்ரன், அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
வேட்டையாடிய பிலிப் சால்ட்
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் (Joe Buttler) மற்றும் பிலிப் சால்ட் (Philip Salt) இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
இவர்களது பார்ட்னர்ஷிப் 68 பந்துகளில் 115 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் விளாசிய பட்லர் 34 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். எனினும் லிவிங்ஸ்டன் 18 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 30 ஓட்டங்கள் விளாசினார்.
வெஸ்ட் அணியின் பந்துவீச்சை வேட்டையாடிய பிலிப் சால்ட் 56 பந்துகளில் 109 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவரது ஸ்கோரில் 9 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும். அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹரி புரூக்கும் ஆட்டமிழக்கமால் 7 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 31 ஓட்டங்கள் குவித்தார்.
இங்கிலாந்து அணி 19.5 ஓவரில் 226 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹோல்டர், ரசல் மற்றும் மோட்டி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |