சாம் ஆல்ட்மேன் மீண்டும் சிஇஓ-வாக நியமனம்: ஓபன் ஏஐ நிறுவனம் அறிவிப்பு
சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பணி நீக்கம்
சமீபத்தில் நிறுவனத்துடனான வெளிப்படைத்தன்மையிலும், தொடர்பிலும் சரியான முறையில் இருக்கவில்லை என தெரிவித்து சாம் ஆல்ட்மேனை சிஇஓ பதவியில் இருந்து ஓபன் ஏஐ நிறுவனம் நீக்கியது.
இதையடுத்து நிறுவனத்தின் நடவடிக்கைகளை கண்டித்து ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் கிரேக் ப்ரோக்மேன் உட்பட முக்கிய ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.
மேலும் நிறுவனத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் 770 பேரில் 500 பேர் நிறுவனத்திற்கு எதிராக போர் கொடியை உயர்த்தினர்.
அத்துடன் மைரோசாப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேன் பணியாற்ற உள்ள ஏஐ பிரிவில் தாங்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.
இதற்கிடையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முதலீட்டாளர்களும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக மீண்டும் சாம் ஆல்ட்மேனை நியமிக்க வலியுறுத்தி வந்தனர்.
மீண்டும் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேன்
இந்நிலையில் சாம் ஆல்ட்மேனை மீண்டும் சிஇஓ-வாக நியமிப்பதாக ஓபன் ஏஐ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு வந்துள்ளது.
OpenAI நிறுவனத்திற்கும், சாம் ஆல்ட்மேனும் இடையே கொள்கை ஒப்பந்தம் எட்டியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் ஒப்பந்தத்தின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |