கொடூர சர்வாதிகார சூழல்..மற்றொரு பேராபத்து - OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை
Sam Altman waring for AI power in single person or country: AI தொடர்பிலான ஆபத்துகளை OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் பட்டியலிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது, அதன் மீதான அதிகாரம் சிலருக்கு மட்டுமே குவிவதும் பேராபத்து என OpenAI சிஇஓ சாம் ஆல்ட்மேன் எச்சரித்துள்ளார்.
சாம் ஆல்ட்மேன்
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதால், நிறுவனத்தின் IPO 2026-க்கு அப்பால் தாமதமாகலாம் என்று OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) குறிப்பிடுகிறார்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மற்றும் மேலும் மேலும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதில் உள்ள பொறுப்பு குறித்த கவலைகளையும் காரணம் காட்டியுள்ள ஆல்ட்மேன், 2026-யில் பொதுப் பங்கு வெளியீடு செய்வது 'தவறான முடிவு' என்கிறார்.
அதே சமயம் AI குறித்த சில ஆபத்துகளையும் கூறி சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர், AI தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுவது முதல் ஆபத்து; அதன் மீதான அதிகாரம் ஒரு சிலரிடம் மட்டும் குவிவது இரண்டாவது பேராபத்து.
AI-யின் வளர்ச்சியை விட அதன் பாதுகாப்பு விதிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அதிநவீன AI ஒரே நபர், நிறுவனம் அல்லது நாட்டின் கையில் முடங்கினால் அது கொடூர சர்வாதிகார சூழலை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.
