சாம் கர்ரன் சிக்ஸர்மழை! வீணான ஜோ ரூட்டின் அரைசதம் (வீடியோ)
The Hundred போட்டியில் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ட்ரென்ட் ராக்கெட்ஸை வீழ்த்தியது.
ஜோ ரூட் 76 ஓட்டங்கள்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் ட்ரென்ட் ராக்கெட்ஸ் மற்றும் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிகள் மோதின.
Joe Root is in the mood 💥#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/mmWRfZQnD3
— The Hundred (@thehundred) August 21, 2025
முதலில் ஆடிய ட்ரென்ட் ராக்கெட்ஸ் (Trent Rockets) 171 ஓட்டங்கள் குவித்தது. ஜோ ரூட் 41 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் விளாசினார்.
ரெஹென் அகமது 28 ஓட்டங்களும், ஜார்ஜ் லிண்டே 25 ஓட்டங்களும் எடுத்தனர். டாம் கர்ரன், ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளும், பெஹ்ரென்டார்ப் மற்றும் சௌடேர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
சாம் கர்ரன் ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய ஓவல் அணியில் முயியே 20 ஓட்டங்களிலும், வில் ஜேக்ஸ் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
எனினும் ஜோர்டன் காக்ஸ், சாம் கர்ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ருத்ர தாண்டவமாடிய சாம் கர்ரன் (Sam Curran) 24 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் விளாசினார்.
Sam Curran is TEEING OFF 😲#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/iUFsN6i0b9
— The Hundred (@thehundred) August 21, 2025
அதேபோல் ஜோர்டன் காக்ஸ் (Jorden Cox) ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 58 ஓட்டங்கள் விளாச, ஓவல் அணி 173 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Destructive power 💥#TheHundred | #RoadToTheEliminator pic.twitter.com/IEJGJ9SoBt
— The Hundred (@thehundred) August 21, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |