சரவெடியாக 59 ரன் விளாசிய சாம் கர்ரன்
டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சோமர்செட் வீழ்த்தியது.
சாம் கர்ரன் விளாசல்
Taunton மைதானத்தில் நடந்த டி20 பிளாஸ்ட் போட்டியில் சர்ரே (Surrey) மற்றும் சோமர்செட் (Somerset) அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய சர்ரே அணி 24 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அதன் பின்னர் கைகோர்த்த ரோரி பர்ன்ஸ் மற்றும் சாம் கர்ரன் கூட்டணி அதிரடியில் மிரட்டியது. அரைசதம் விளாசிய சாம் கர்ரன் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
Dispatched into the crowd by Sam Curran! ?
— Surrey Cricket (@surreycricket) July 12, 2024
Surrey 97/3 from 12 overs.
WATCH LIVE ? https://t.co/fYQ3aOCliY
? | #SurreyCricket pic.twitter.com/DH5HMh76wO
அடுத்து பர்ன்ஸ் 44 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஜேமி ஓவெர்ட்டன் 13 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் சர்ரே அணி 182 ஓட்டங்கள் குவித்தது. கிரேக் ஓவெர்ட்டன், லீச், மெரிடித், கிரேகோரி, மற்றும் பால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
சோமர்செட் வெற்றி
பின்னர் களமிறங்கிய சோமர்செட் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேட்மோர் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்தார்.
? partnership between Sam Curran (58*) & Rory Burns (45*) from 68 balls.
— Surrey Cricket (@surreycricket) July 12, 2024
Keep going! ? Surrey 126/3 from 15 overs.
WATCH LIVE ? https://t.co/fYQ3aOCliY
? | #SurreyCricket pic.twitter.com/NUEkafMrGL
ஜார்ஜ் தாமஸ் 40 (25) ஓட்டங்களும், டாம் அபெல் 30 (29) ஓட்டங்களும் விளாசினர். ஜோர்டான் கிளார்க், கிறிஸ் ஜோர்டான், ஸ்டீல் மற்றும் வில் ஜேக்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Rory Burns moves to 5⃣0⃣ with a boundary into the off side! Burnsy's half-century comes from 38 balls! ?
— Surrey Cricket (@surreycricket) July 12, 2024
Surrey 136/4.
WATCH LIVE ? https://t.co/fYQ3aOCliY
? | #SurreyCricket pic.twitter.com/P3L1sCjjev
50 for Tom Kohler-Cadmore ????
— Somerset Cricket ? (@SomersetCCC) July 12, 2024
LIVE STREAM ➡️ https://t.co/aRtGCP76ez#SOMvSUR#WeAreSomerset pic.twitter.com/slwwho9BzS
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |