10 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுட்டிக்குழந்தை! உலகக்கோப்பையில் படைத்த மிகப்பெரிய சாதனை
24 வயதாகும் சாம் கரன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது
உலகக்கோப்பையில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்தின் சாம் கரன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பெர்த்தில் நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி சாம் கரன், ஸ்டோக்ஸ், மார்க் வுட் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 112 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்தின் சாம் கரன் 10 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதிகபட்சமாக இப்ராஹிம் ஸட்ரான் 32 ஓட்டங்களும், உஸ்மான் கணி 30 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 18.1 ஓவர்களில் 113 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லியாம் லிவிங்ஸ்டன் 29 ஓட்டங்களும், ஹேல்ஸ் 19 ஓட்டங்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் தரப்பில் பாரூக்கி, முஜீப், ரஷீத் கான், மாலிக் மற்றும் நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.