ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் இருந்து சுட்டிக் குழந்தை விலகல்! சிஎஸ்கே-இங்கிலாந்து அணிகளுக்கு பெரிய இழப்பு
2021 ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பையில் இருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் சாம் கரன் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்(ECB) வெளியிட்டுள்ள அறிக்கையில், Surrey மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கரன் கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஐசிசி ஆண்கள் டி-20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளனர்.
சனிக்கிழமை ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய போட்டிக்கு பின்னர் முதுகுவலி இருப்பதாக சாம் கரன் புகார் செய்தார்.
ஸ்கேன் முடிவுகள் காயம் ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது. அடுத்த இரண்டு நாட்களில் அவர் மீண்டும் இங்கிலாந்துக்கு புறப்படுவார்.
ECB-யின் மருத்துவக் குழுவால் இந்த வார இறுதியில் சாம்கரனுக்கு ஸ்கேன் மற்றும் முழு மதிப்பாய்வு செய்யப்படும்.
Speedy recovery, @CurranSM ?#T20WorldCup squad update ⬇️
— England Cricket (@englandcricket) October 5, 2021
சாம் கரனின் சகோதரர் டாம் கரன் டி-20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கூடுதலாக, Surrey-யின் Reece Topley ரிசர்வ வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். Topley உரிய நேரத்தில் இங்கிலாந்து அணியில் இணைவார்.
ஐபிஎல் தொடரில் இல்லாத இங்கிலாந்து வீரர்களும் நிர்வாகமும் இன்று Muscat-ற்கு வந்தடைந்தார்கள் மற்றும் 16 அக்டோபர் வரை, அதாவது டி20 உலகக் கோப்பை தொடருக்காக துபாய்க்கு புறப்படும் வரை ஓமானில் இருப்பார்கள் என ECB தெரிவித்துள்ளது.