CSK சுட்டிக் குழந்தைக்கு கல்யாணம்! காதலியிடம் ப்ரொபோஸ் செய்த சாம் கரண்: வைரல் புகைப்படம்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கரண் தனது நீண்ட நாள் காதலியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்திய தருணம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலிக்கு ப்ரொபோஸ் செய்த சாம் கரண்
தன்னுடைய நீண்ட நாள் காதலி இசபெல்லா கிரேஸிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் ஆன சாம் கரண் ப்ரொபோஸ் செய்த தருணம் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

சாம் கரணின் திருமண வேண்டுகோளை காதலி இசபெல்லா கிரேஸ் ஏற்றுக் கொண்டதை அடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் சாம் கரண் தன்னுடைய காதலி இசபெல்லா கிரேஸிடம் திருமண வேண்டுகோளை முன்வைத்த தருணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், வாழ்த்துகளை பெற்று வருகிறது.
சுட்டிக் குழந்தை சாம் கரண்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த சாம் கரண், தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்களால் சுட்டிக் குழந்தை என்று அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.
கடந்த சீசனில் CSK அணியில் இடம் பெற்றிருந்த சாம் கரண், எதிர்வரும் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக டிரேட் முறையில் வாங்கப்பட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |