துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நெருங்கி தோற்றுவிட்டோம் - சாம் கரன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சரியாக துடுப்பாடவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவர் சாம் கரன் தெரிவித்துள்ளார்.
சண்டிகரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, ஷிம்ரான் ஹெட்மையர் 2 சிக்ஸர் விளாசி மிரட்டினார்.
We fought till the end but it wasn't enough. ?#SaddaPunjab #PunjabKings #JazbaHaiPunjabi #TATAIPL2024 #PBKSvRR pic.twitter.com/AVvUWCGybR
— Punjab Kings (@PunjabKingsIPL) April 13, 2024
போட்டிக்கு பின் பேசிய பஞ்சாப் கிங் அணித்தலைவர் சாம் கரன் தோல்வி குறித்து கூறுகையில்,
''விக்கெட் சற்று மெதுவாக இருந்தது, ஆனால் நாங்கள் துடுப்பாட்டத்தை சரியாக தொடங்கவில்லை. இறுதியில் சரியாக முடிக்கவும் இல்லை. இறுதிக்கட்ட வரிசையில் முயற்சிகள் சிறப்பாக இருந்ததால் 150 ஓட்டங்களுக்கு நெருக்கமாக வந்தது சிறப்பாக இருந்தது. பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் நாங்கள் அவர்களை கட்டுப்படுத்தினோம், துரதிர்ஷ்டவசமாக மீண்டும் ஒரு நெருக்கமான தோல்வி'' என தெரிவித்தார்.
1 more over to seal the win! pic.twitter.com/KPV99ASlNg
— Punjab Kings (@PunjabKingsIPL) April 13, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |