இலங்கைக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த சாம் கர்ரன்
இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் சாம் கர்ரன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
சாம் கர்ரன்
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி பல்லேகேலவில் நடந்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 11 ஓட்டங்கள் (DLS முறையில்) வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இளம் வீரர் சாம் கர்ரன் (Sam Curran) எதிரணி தலைவர் தசுன் ஷானகா, தீக்ஷணா மற்றும் பத்திரனா என ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரண்டாவது இங்கிலாந்து வீரர்
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் 2024யில் அமெரிக்க அணிக்கு எதிராக கிரிஸ் ஜோர்டன் (Chris Jorden) ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
மேலும், சாம் கர்ரன் இலங்கை அணிக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்த 6வது பந்துவீச்சாளர் ஆவார்.

65 போட்டிகளில் விளையாடியுள்ள சாம் கர்ரன் 60 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் அவரது சிறந்த பந்துவீச்சு 5/10 ஆகும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |