அப்போ நாங்க நண்பர்கள்! ஆனா இப்போ எதிரி... இந்திய அணியின் இரு வீரர்கள் குறித்து சாம் கரன் ஓபன் டாக்
இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்று விளையாடி வரும் கிரிக்கெட் தொடரில் கலக்கி வரும் இளம் வீரர் சாம் கரன் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
சாம் கரன் பேசுகையில், ஐபிஎல் தொடரானது பல்வேறு வீரர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பையும், அவர்களிடம் அதிக நேரம் பேசும் தருணங்களையும் தருகிறது. சிஎஸ்கே அணியில் இருந்து பல விடயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
ஏற்கனவே சிஎஸ்கே அணியுடன் விளையாடும் பொழுது ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருடன் நன்கு பழகி உள்ளேன். ஆனால் தற்போது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிரிகளாக விளையாடி வருகிறோம்.
ஐபிஎல் தொடரின்போது அவர்கள் இருவருமே எனக்கு மிகச்சிறந்த நண்பர்கள். ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் எங்களை எதிர்த்து விளையாடி கொள்வதால் எதிரிகளாக கருதி விளையாடி வருகிறோம். இருப்பினும் போட்டியை தவிர்த்து அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.
இந்த டெஸ்ட் தொடர் முடிந்து ஐபிஎல் போட்டிகளில் அவர்களுடன் இணைந்து விளையாட காத்திருக்கிறேன். டோனி எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களுக்கு ஒரு நல்ல கேப்டனாக இருந்துள்ளார்.
அவரின் தலைமையின் கீழ் சிஎஸ்கே அணியில் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவத்தை தருகிறது என கூறியுள்ளார்.