சரித் அசலங்கா, ஹார்பர் ருத்ரதாண்டவம்: காலி கல்லன்ட்ஸ் 208 ஓட்டங்கள் குவிப்பு
LPL டி20 போட்டியில் அசலங்கா, ஹார்பரின் அதிரடியில் காலி கல்லன்ட்ஸ் அணி 208 ஓட்டங்கள் குவித்தது.
சாம் ஹார்பர் அதிரடி
பல்லகெலேவில் நடந்து வரும் LPL 2026 டி20 போட்டியில் காலி கல்லன்ட்ஸ் மற்றும் கண்டி ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வென்ற காலி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
நூருல் ஹசன் 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய சாம் ஹார்பர் (Sam Harper) 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் விளாசினார்.
துவம்சம் செய்த அசலங்கா
அடுத்து வந்த சரித் அசலங்கா எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் அடித்தார்.
அணித்தலைவர் ஷானகா 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சரித் அசலங்கா ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 70 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.
காலி கல்லன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் குவித்தது. ஜாகிர் கான் 2 விக்கெட்டுகளும், துஷாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |