4,483 பந்துகளுக்கு பிறகு சிக்ஸ்! பாக்சிங் டேயில் அறிமுகமான வீரர் அரைசதம்..மிரண்டுபோன பும்ரா
அவுஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்தார்.
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி அறிமுக வீரரான சாம் கொன்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
WHAT ARE WE SEEING!
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
Sam Konstas just whipped Jasprit Bumrah for six 😱#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/ZuNdtCncLO
அதிரடியில் மிரட்டிய சாம் கொன்ஸ்டாஸ் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஓவரில் சிக்ஸர் அடித்தார்.
பும்ராவின் 4,483 பந்துகளுக்கு பிறகு அவரது ஓவரில் சிக்ஸர் அடித்த வீரர் எனும் பெருமையை சாம் கொன்ஸ்டாஸ் பெற்றார்.
மேலும் அறிமுக டெஸ்டில் அரைசதம் விளாசி மிரட்டினார். 65 பந்துகளை எதிர்கொண்ட சாம் கொன்ஸ்டாஸ் (Sam Konstas) 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்கள் எடுத்து ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார்.
Sam Konstas taps the Australian crest as he makes a remarkable 50 on debut! #AUSvIND | #MilestoneMoment | @nrmainsurance pic.twitter.com/y1tp4rT9qG
— cricket.com.au (@cricketcomau) December 26, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |