அறிமுக போட்டியிலேயே 20 பந்தில் அரைசதம்! புதிய சரித்திரம் படைத்த 19 வயது வீரர்
BBL தொடர் போட்டியில் சிட்னி தண்டர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது.
வெதரால்டு 40
கான்பெர்ராவில் நடந்த பிக் பாஷ் 2024 தொடர் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி தண்டர் அணிகள் மோதின.
முதலில் ஆடிய அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 8 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் குவித்தது. ஜேமி ஓவெர்ட்டன் 35 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 45 ஓட்டங்களும், வெதரால்டு 19 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களும் விளாசினர்.
Jake Weatherald!#BBL14 pic.twitter.com/3VJiMruntM
— KFC Big Bash League (@BBL) December 17, 2024
லாக்கி பெர்குசன், கிறிஸ் கிரீன் தலா 3 விக்கெட்டுகளும், டி சங்கா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
டேவிட் வார்னர் அவுட்
பின்னர் களமிறங்கிய சிட்னி தண்டர் அணியில் டேவிட் வார்னர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பான்கிராஃப்ட் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.
Warner goes!
— KFC Big Bash League (@BBL) December 17, 2024
Lloyd Pope holds on to a very nice catch and the Thunder captain has to depart. #BBL14 pic.twitter.com/tsRNMbgM2H
அதிரடியில் மிரட்டிய சாம் கொன்ஸ்டாஸ் 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார். 19 வயதான சாம் கொன்ஸ்டாஸ் (Sam Konstas), BBL வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்த இளம் வீரர் எனும் சாதனையை படைத்தார்.
Fastest fifty in Thunder history ON DEBUT 😱
— KFC Big Bash League (@BBL) December 17, 2024
Sam Konstas brings up the milestone off 20 balls! #BBL14 pic.twitter.com/Wq6xmQH78j
ஒலிவர் டேவிஸ் 23 ஓட்டங்களும், சாம் பிலிங்ஸ் 29 ஓட்டங்களும் எடுத்து அவுட் ஆக, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
த்ரில் வெற்றி
கடைசி ஓவரில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஓவெர்ட்டன் வீசிய அந்த ஓவரில் முதல் பந்திலேயே மெக்கான்ட்ரோ அவுட் ஆனார்.
அடுத்த பந்தில் பெர்குசன் ஒரு ரன் எடுக்க, 3வது பந்து டாட் ஆனது. 4வது பந்தை சந்தித்த டேனியல் சாம்ஸ் ஒரு ரன் எடுக்க, சிட்னி தண்டர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
18 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் எடுத்த டேனியல் சாம்ஸ் (Daniel Sams) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |