நடிகை சமந்தாவை கோபப்படுத்திய பத்திரிக்கையாளர்! என்ன கேட்டார் தெரியுமா? வைரலாகும் வீடியோ
பிரபல திரைப்பட நடிகையான சமந்தா பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து குறித்து கேட்ட கேள்விக்கு கடும் கோபமாக திட்டிய வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சமந்தா, தெலுங்கு உலகின் கிங் ஸ்டரானா நாகர்ஜுனாவின் மகனான நாகசைதன்யாவை, கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும், சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். அப்படி இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 படம் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
Sam really proud of you!! Some people don’t understand what to ask when .. Just loved that reply of yours !@Samanthaprabhu2
— Multi Fandom (@multifandom5928) September 18, 2021
.
.#SamanthaAkkineni #SamanthaRuthPrabhu #Samantha pic.twitter.com/5RUO5bbhbz
குறிப்பாக நடிகை சமந்தாவின் கேரக்டரை தமிழர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தினர். இதற்கிடையில் சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனி என்ற வார்த்தையை நீக்கினார்.
இதனால் சமந்தா மற்றும் நாகைசைத்தன்யாவிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவதாகவும், இதன் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்தி வெளியானது.
சில தினங்களுக்கு முன்பு கூட, நாகைசைத்தன்யா நடிப்பில் வெளியான லவ்ஸ்டோரி படத்திற்கான புரோமோஷனின் போது, பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்பட்டனர்.
அப்போது படம் தொடர்பான கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும், சொந்த வாழ்க்கை தொடர்பான கேள்விகள் கேட்கக்கூடாது என்று பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கபப்ட்டது.