சமந்தாவிற்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய்!
சமந்தா ருத் பிரபு இந்திய திரைப்பட நடிகையான இவர் தனது தனித்துவமான நடிப்பினாலும் மற்றும் திறமையினாலும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துக்கொண்டவர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகிலும் வெள்ளித்திரைக்கும் அறிமுகமானார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
மயோசிடிஸ் குறித்து சமந்தா கூறுகையில்..
திரையுலகில் நட்சத்திரமாக மின்னும் நடிகர், நடிகைகள் பெரும்பாலும் தங்களது உடல் நல பிரச்சனைகள் குறித்து பகிரங்கமாக பேசுவதில்லை.
ஆனால் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதையும் சமீபத்தில் பகிரங்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார்.
மேலும் தனக்கு என்ன மாதிரியான நோய் என்பது குறித்தும் விளக்கம் அளித்திருந்தார்.
சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் (தசை அழற்சி) நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது குறித்தும் நோயில் இருந்து குணமடைந்த பிறகு, இதைப் பற்றி வெளியே சொல்லலாம் என எதிர்பார்த்தேன்; ஆனால் நான் எதிர்பார்த்ததை விட நோயில் இருந்து குணம் பெற அதிக நாட்கள் தேவைப்படுகிறது.
எப்போதும் தைரியத்துடன் இருக்க வேண்டியது இல்லை என்பதை உணர்ந்தேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்ள மிகவும் கடினமாக உள்ளது.
நான் விரைவில் குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
உணர்ச்சி ரீதியாக, உடல் ரீதியாக என நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் இரண்டையும் கடந்துள்ளேன்.
இந்த நாளை என்னால் கையாள முடியாது என நினைத்தேன். ஆனால் அதுவும் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.
நான் குணமடைவதற்கான நாளை நெருங்கிவிட்டேன் என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.