2வது திருமணம் செய்த நடிகை சமந்தா - யார் இந்த ராஜ் நிடிமொரு?
நடிகை சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா.

சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும், கடந்த 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு நாக சைதன்யா நடிகை சோபிதா தூலிபாவை இரண்டாம் திருமணம் செய்தார்.
ராஜ் நிடிமொருவுடன் திருமணம்
இந்நிலையில் இன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங் பைரவி கோவிலில் அதிகாலையில் சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமொருவிற்கு(Raj Nidimoru) திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ராஜ் நிடிமொரு, கிருஷ்ணா தசரகோதபள்ளியுடன் இணைந்து பல பாலிவுட் திரைப்படங்களை இயக்கி, தயாரித்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு ராஜ் நிடிமொரு இயக்கத்தில் வெளியான தி பேமலி மேன் என்னும் பிரபல இணையத் தொடரில் சமந்தா நடித்திருந்தார்.

அப்போது முதலே இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறி, இருவரும் பல நிகழ்வுகளுக்கு ஒன்றாக வலம் வர தொடங்கினர்.
ஆந்திராவின் திருப்பதியை பூர்விகமாக கொண்ட ராஜ் நிடிமொருவுக்கு, 2015 ஆம் ஆண்டில் ஷ்யமாலி தே என்பவருடன் திருமணமாகி, 2022 ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |