நடிகை சமந்தாவின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.., எத்தனை கோடிகள் தெரியுமா?
நடிகை சமந்தா 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி சென்னையில் பிறந்தார்.
பல்லாவரத்தில் வாழ்ந்து வந்த சமந்தா ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் படித்து தனது டிகிரியை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படித்து பெற்றார்.
அதன்பின் விளம்பரங்களில் நடித்து வந்த போது கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முதல் படத்திலேயே நாக சைதன்யா உடன் இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதலித்து 2017ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டனர்.
பின் இருவரும் திடீரென 2021ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நாக சைதன்யாவை பிரிந்த நிலையில், நடிகை சமந்தா சினிமாவில் தீவிரமாக ஆர்வம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதை விட நடிகை சமந்தா எக்கச்சக்க விளம்பரங்களில் நடித்து தனியாக பெரிய வருமானத்தை ஒவ்வொரு ஆண்டும் சம்பாதித்து வருகிறாராம்.
இவருக்கு ஹைதராபாத்தில் உள்ள ஜூபிளி ஹில்ஸில் அன்னபூர்ணா ஸ்டூடியோஸில் சொகுசு பங்களா ஒன்று சமந்தாவுக்கு சொந்தமாக உள்ளது.
மேலும், மும்பையிலும் சமந்தா ஒரு வீட்டை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தெலங்கானாவிலும் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் சமந்தா என்கின்றனர்.
மேலும், இவரிடம் BMW 3 series, BMW X5 மற்றும் Jaguar XFR உள்ளிட்ட கார்களை வைத்திருக்கிறார்.
சினிமா, விளம்பரம், முதலீடுகள் செய்யும் நடிகை சமந்தா 13 மில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக உள்ளார் என்கின்றனர்.
அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ. 101 கோடி சொத்து மதிப்புக்கு சொந்தக்காரர் சமந்தா என தகவல்கள் வெளியாகி உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |