முன்னோக்கி செயல்படு! எளிய தீர்மானங்களுக்கான நேரம் இது.. இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் பதிவு
புத்தாண்டு வாழ்த்து கூறி நடிகை சமந்தா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமந்தா
மயோசிடிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அதற்காக தற்போது தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதாவது, சமந்தா தமது வாழ்த்து செய்தியில், 'முன்னோக்கி செயல்படு... நம்மால் முடிந்ததைக் கட்டுப்படுத்துங்கள்!! புதிய மற்றும் எளிதான தீர்மானங்களுக்கான நேரம் இது என்று யூகிக்கவும்.. நம்மீது அன்பாகவும், மென்மையாகவும் இருக்கும் கடவுள் ஆசீர்வதிப்பாராக.. மகிழ்ச்சியான 2023!!' என கூறியுள்ளார்.
அரியவகை நோயை எதிர்த்து போராடும் சமந்தாவை பாராட்டி வரும் ரசிகர்கள், தற்போது இந்த பதிவின் மூலம் சமந்தாவை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
Function forward…
— Samantha (@Samanthaprabhu2) December 29, 2022
Control what we can!!
Guess it’s time for newer and easier resolutions.. ones that are kinder and gentler on ourselves.
God bless ??
Happy 2023!! pic.twitter.com/AcPMlkoeo8