முன்னாள் கணவரை பிரிந்ததற்கு காரணம் இதுதானா?- சமந்தா கூறிய சீக்ரெட்
சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, நாக சைதன்யா பற்றி மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறார்.
வெளியிட்ட பதிவு
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு குடும்பத்தினர் சம்மதத்துடன், இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் நடிகை சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவரும் கடந்த 2021ஆம் ஆண்டில் விவாகரத்து முடிவை அறிவித்தனர்.
இதன் பிறகு சமந்தா பல படங்களில் ஹிட் கொடுத்து வந்த நிலையில் திடீரென அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு முடங்கினார்.
அதில், ''எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது. எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட நான் இத்தனை காலம் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன்'' என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |